ஐபிஎல்: டெல்லியை துவம்சம் செய்து ஐதராபாத் வெற்றி !

டெல்லியில்  (ஏப்ரல் 4) நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 131 ரன்கள் எடுத்து ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரிதீவ் ஷா, தவானும் களமிறங்கினர். இத்தொடரில் இதுவரை நன்றாக ஆடிய வந்த பிரதீவ் ஷா இன்று ஏமாற்றம் அளித்தார். 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார். இவர் சென்ற சிறிது நேரத்திலேயே தவானும் (12 ரன்) நபி பந்துவீச்சில் சந்தீப் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த ரிஷாப் பாண்ட்டை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். அவரும் 5 ரன்னில் வெளியேறி ஏமாற்றினார். ஒரு பக்கம் கேப்டன் என்ற பொறுப்புடன் ஸ்ரேயாஸ் அய்யர் ஆடி வர, அதன் பிறகு வந்த வீரர்கள்  ஐதராபாத் அணி பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

ஸ்ரேயஸ் அய்யரும் 43 ரன்களில் அவுட் ஆக, டெல்லி அணி வீரர்களின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. கடைசி ஓவரில் அக்ஸர் பட்டேல் பவுண்டரி, சிக்ஸர் அடித்தது மட்டும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இறுதியில் அந்த அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்து, ஐதராபாத் அணிக்கு 130 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதனைத் தொடர்ந்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.  ஜானி சதம் அடிப்பார் என எதிர்பார்த்தபோது, 48 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டேவிட் வார்னரர் 10 ரன்களிலும் ஆவுட் ஆனார்.

விஜய் சங்கரும், மனிஷ் பாண்டோ ஜோடி அதிரடியாக ஆடத் தொடங்கியது. 13வது ஓவரில் 95 ரன்கள் எடுத்தபோது, மனிஷ் பாண்டேவும் அவுட் ஆனார். அவர் எடுத்த ரன்கள் 10 மட்டுமே். பின்னர் விஜய் சங்கருடன் தீபக் ஹுடா ஜோடி சேர்ந்தார். 13.5 ஓவரில் 100வது ரன்னைத் தொட்டது.

விஜய் சங்கர் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, தீபக் ஹுடா, யூசப் பதான் ஆகியோர்  ஆட்டத்தை தொடர்ந்தனர்.  தீபக் ஹுடா ஆட்டமிழந்ததையடுத்து, முகமது நபி களம் இறங்கினார்.

இறுதியில் 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.