பரிசில் அதிகரித்துவரும் பொக்பொக்கட் கொள்ளைகள்.!!

பரிசிலே கடந்த சில வாரங்களாக பிக்பொக்கட் கொள்ளைகள் மிகவும் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். தனி நபர்களாகவும் குழுவினராகவும் இணைந்து பரிஸ் மெட்ரோ மற்றும் RER களில் பயணிக்கும் பொதுமக்களின் பெறுமதிமிக்க தொலைபேசிகள், பணப்பைகள் போன்றவற்றை திருடர்கள் கொள்ளையிடுகிறார்கள்.

இதில் எம்மவர்களைப் பொறுத்தவரை தம்மை பாதுகாக்கும் அக்கறை இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.

தொடரூந்து வாசலில் நின்று போன் கதைப்பது, முதுகிலே உள்ள பை திறந்துள்ளதா? மூடியுள்ளதா? என்று கவனிக்காமல் இருப்பது என்று பாதுகாப்பு உணர்வு பூஜ்யம்....😊

ஏற்கனவே இந்த கொள்ளையர்களிடம் நம்மவர்கள் பறிகொடுத்த பொருட்களின் பெறுமதியை அளந்தால், அதை வைத்து ஒரு குட்டித் தீவையே வாங்கலாம்.

காவல்துறையினரின் இந்த புதிய எச்சரிக்கை இன்று பிற்பகலில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. இனியாவது நாம் கவனமாக இருப்போமாக...!!!

No comments

Powered by Blogger.