களைகட்டும் குறளரசன் திருமணம்: மகனுடன் சென்று சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு விடுத்த டி.ஆர்!


நடிகர் ரஜினிகாந்தை நேரில்  சந்தித்த டி.ராஜேந்தர் தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

  குறளரசன் திருமணம் 
kuralarasan
நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் நடிகை உஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நடிகர் சிலம்பரசன், குறளரசன் என்ற இரு மகன்களும், இலக்கியா என்ற மகளும்  உள்ளனர்.  
இலக்கியாவுக்கு திருமணம் ஆன நிலையில், சமீபத்தில் சிம்புவுக்கு பெண் பார்த்து வருவதாக டி.ராஜேந்தர் கூறியிருந்தார். 
இவரது இளையமகன் குறளரசன் சிம்பு நயன்தாரா நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து வேறு எந்த படத்திலும் அவர் ஒப்பந்தமாகாத நிலையில் ஆல்பம் ஒன்றை உருவாக்கி வருகிறார்.
திருமண வரவேற்பு
kural invitation
இதனிடையே இஸ்லாமியப் பெண்ணான  நபீலா ஆர். அஹமத். என்பவரை குறளரசன் காதலித்து வந்த நிலையில்  கடந்த பிப்ரவரி 16-ம் தேதி டி.ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதை தொடர்ந்து   குறளரசன் - நபீலா ஆர். அஹமத் ஆகியோரின்  திருமண வரவேற்பு இருவீட்டார் சம்மதத்துடன் வருகிற 29-ம் தேதி சென்னை கிண்டியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் விமர்சையாக நடைபெறவுள்ளது. 
ரஜினிக்கு நேரில் அழைப்பு 
tr
இதன் காரணமாக திரையுலகை சேர்ந்த தனது  நண்பர்களை நேரில் சென்று மகன் திருமணத்திற்கு அழைப்பு விடுத்து வருகிறார் டி.ராஜேந்தர் . அதன்படி இன்று நடிகர் ரஜினிகாந்தை அவர் இல்லத்தில் சந்தித்த டி.ஆரும் , அவரது மகன் குறளரசனும் திருமண அழைப்பிதழை வழங்கினர். இதற்கான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 
முன்னதாக நடிகர் விஜயகாந்தை சந்தித்த டி.ராஜேந்தர் திருமணத்திற்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது. டி.ராஜேந்தர் மேலும் பல திரை நட்சத்திரங்களைச் சந்தித்து அவர் அழைப்பு விடுக்கவுள்ளதால்  இந்தத் திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Powered by Blogger.