கவன ஈர்ப்பை பெறும் ஹாரர் காமெடி படங்கள்; மே மாதம் வெளியாகிறது ஜாம்பி!!

https://www.tamilarul.net/
புவன் நல்லான் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடிக்கும் ஹாரர் காமெடி படம் ஜாம்பி.


horror
ஈசிஆரில் உள்ள விடுதி ஒன்றில் பிறந்தநாள் விழா கொண்டாடப் போகும் நண்பர்களுக்கு ஜாம்பிகளால் என்ன நிகழ்கிறது என்பதுதான் கதை. ஒருநாள் இரவில் நடக்கும் சம்பவம் என்பதால் பெரிய பொருட்செலவு இல்லாமல் எளிதாக படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.
ஹாரர் காமெடி படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘தில்லுக்கு துட்டு 2’ படமும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
horor
யோகி பாபு காமெடிக்கு ஒரு ரசிக பட்டாளமே உள்ளது. இந்த படத்தில் யோகி பாபு டெடிகேசன் வேற லெவல் என யாஷிகா கூட பாராட்டியிருந்தார். இந்தத் திரைப்படம் மே முதல் வாரத்துக்குள் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

Powered by Blogger.