தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற வேண்டும்! வாழ்த்து சொன்ன இயக்குநர் யாரு தெரியுமா?

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற வேண்டும் என்று  இயக்குநர் சீனு ராமசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. பல்வேறு கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திரையுலகினர் பலர் தாங்கள் சார்ந்த அரசியல்  அரசியல் கட்சிக்காக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சீனுராமசாமி, தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்ற தனது வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளார். 
இதுகுறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் 'கவிஞர் எழுத்தாளர் பாடலாசிரியர் பெண்ணுரிமையாளர் பழகுவதற்கு எளிமையான மனுசி  தென்சென்னை மாவட்ட நாடமன்ற தொகுதி வேட்பாளர் பெருமைமிகு தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்' என்று பதிவு செய்துள்ளார்.

Powered by Blogger.