விஜய் 63 அப்டேட்: பிரமாண்டமாக தயாராகி வரும் ஃபுட்பால் ஸ்டேடியம்!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 63 படத்துக்காக சென்னையில் பிரம்மாண்டமாக  ஃபுட்பால் ஸ்டேடியம் அமைக்கப்பட்டுள்ளது.
தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீ-விஜய் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் தளபதி 63. ஏ.ஜி.எஸ் என் டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.


மேலும் இதில் யோகி பாபு,கதிர், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், விவேக்,ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சென்னையில் பல்வேறு இடத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் ஷூட்டிங் தொடங்கி 2 மாதத்தில் 60% படப்பிடிப்பு முடிவுயடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கால்பந்தை மையமாக கொண்டு உருவாகிவரும் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிக்காக சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்டமாக கால்பந்தாட்ட அரங்கம் தயாராகி வருகிறது. அப்பணிகள் முடிந்த பின் தொடர்ந்து 50 நாட்கள் அங்கு தான் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இந்த அரங்கம் தயாரிப்புப் பணிகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.