அர்ஜுனா விருதுக்கு கிரிக்கெட் வீரர்கள் பரிந்துரை!

மத்திய அரசு வழங்கும் அர்ஜுனா விருதுக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களை பரிந்துரை செய்துள்ளது.
விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனை படைக்கும் வீரர்களுக்கு கௌரவப்படுத்தும் வகையில், மத்திய அரசு சார்பில் அர்ஜுனா விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, வில்வித்தையில் சிறந்த வீரரான அர்ஜுனனின் வெண்கலச் சிலையோடு, ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படும். அதே போல் பயிற்சியாளருக்காக துரோணாச்சாரியா விருதும் வழங்கப்படும்.
1961ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு அந்தந்த விளையாட்டு அமைப்புகள் சார்பில் தகுதிவாய்ந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு, கிரிக்கெட் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி மற்றும் கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ் ஆகியோரின் பெயர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த ஆண்டு இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானாவுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.