இன ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் நோக்கம் இல்லை – நஸீர்!

இன ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் நோக்கம் இல்லையென கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் நஸீர் குறிப்பிட்டுள்ளார்.


சம்மாந்துறை தனியார் நிலையம் ஒன்றில் கல்முனையில் இயங்கி வரும் பிரதேச செயலகம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எமது ஊடக மாநாட்டை கல்முனையில் நடத்துவதற்கு பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.

கல்முனையில் வடக்கு பிரதேச செயலகம் என்ற ஒன்று இல்லை. ஆனால் அதனை தெளிவுபடுத்துவதற்கு முயன்றேனே அன்றி இனங்களுக்கு இடையில் இன நல்லுறவை பாதிக்கும் வகையில் செயற்படவில்லை.

எதிர்காலத்தில் கல்முனை பகுதியில் இன நல்லுறவை பாதிக்கும் வகையில் இவ்வாறான பிரித்தாளும் நிலைமையினை ஏற்படுத்தக்கூடாது என்பதை தெளிவுபடுத்தி அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழவே இந்ந மாநாட்டை கூட்டி வலியுறுத்தவே முயன்றேன்.

அத்துடன் இங்குள்ள பௌத்த மதகுரு ஒருவரே தமிழ் முஸ்லிம் மக்களை பிரிக்கும் முயற்சியில் முன்னின்று செயற்படுகிறார். அவரே சில தமிழ் சகோதரர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார். ஆனால் நாங்கள் சமூகத்தை ஐக்கியப்படுத்தவே பாடுபடுகின்றோம்.

எனவே இந்த பிரதேச செயலக விடயத்தில் ஒற்றுமையுடன் தமிழ் பேசும் மக்களாக தொடர்ந்து செயற்படுவோம்” என குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.