உயிர்நீத்த உறவுகளுக்கு மட்டக்களப்பில் சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி!!

மட்டக்களப்பு, பட்டிருப்புத் தொகுதி தமிழ் இளைஞர் சேனை அமைப்பினரால் குண்டுத் தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு 359 சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.


கடந்த உயிர்த்த ஞாயிறு திகத்தன்று இலங்கையில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களால் மரணமடைந்த 359 அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தி வேண்டி களுவாஞ்சிகுடி பேருந்து தரிப்பிடத்தில் இந்த 359 ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டு இன்று (புதன்கிழமை) மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது கல்முனை விகாராதிபதி சங்கரத்தினதேரர், களுவாஞ்சிகுடி சிவ ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய பிரதம குருவான சண்முக மயூரவதன குருக்கள், ஓந்தாச்சிமடம் சிமர்னா தேவாலயத்தின் அருட்தந்தை சுனில், பொதுமக்கள், பட்டிருப்புத் தொகுதி தமிழ் இளைஞர் சேனை அமைப்பினர், களுவாஞ்சிகுடி பொலிஸார் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

இதில் கலந்துகொண்ட மும்மதத் தலைவர்களும், குண்டுத்தாக்குதலின் போது உயிரிழந்த உறவுகளுக்காக வேண்டி பிராத்தனை செய்ததோடு, மூவரும் இணைந்து பொதுச் சுடர் ஏற்றியதுடன், கலந்து கொண்டே ஏனையோர் ஏனைய சுடர்களை ஏற்றி மௌன அஞ்சலியும் செலுத்தினர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo       
Powered by Blogger.