சிரியாவில் இஸ்லாமிய பயங்கரவாத குண்டுதாரி பயிற்சிபெற்றவர்!!
ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் ஒருவர் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரிடம் பயிற்சி பெற்றார் என விசாரணைகளுடன் தொடர்புபட்டவர்களை மேற்கோளிட்டு The Wall Street Journal ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹோட்டலில் நடத்தப்பட்ட அதாவது தெஹிவளையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிற்கு காரணமானவர் சிரியா சென்று ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பினரிடம் பயிற்சி பெற்றார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் தலைநகரமாக இருந்த சிரியாவின் ரக்கா பகுதிக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு லத்தீவ் என்பவர் சென்றிருந்ததுடன் வெளிநாட்டு தீவிரவாதிகள் பலரும் அங்கு அதேநேரம் சென்றுள்ளனர்.
அவர் அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு ஆட்களை சேர்ப்பதில் ஈடுபட்டிருந்த அவுஸ்ரேலியாவின் நெய்யில் பிரகாஸ் மற்றும் ஜிகாதி ஜோன் என அழைக்கப்பட்ட பிரித்தானியாவின் மொஹமட் எம்வாஜியுடன் தன்னை சேர்த்துக்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க செய்தியாளர்கள் ஜேம்ஸ் பொலி மற்றும் ஸ்டீபன் சொட்லொவ் கொல்லப்படுவதற்கு காரணமான எம்வாஜியே இவர் 2015 இல் அமெரிக்காவின் ஆளில்லாத விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லத்தீவ் பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியாவில் வானூர்தி பொறியலை பயின்றார். அதேவேளை இவர் மூன்று அல்லது ஆறு மாதங்கள் சிரியாவில் பயிற்சி பெற்றுள்ளார் அதன் பின்னர் மேலும் உறுப்பினர்களை சேர்ப்பதற்காக அவர் இலங்கைக்கு அனுப்பபட்டார் எனவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை துருக்கி சிரியா ஈராக்கிற்கு பயணம் மேற்கொண்டமை குறித்து மூன்று குண்டுதாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரை தொடர்பு கொண்டு குண்டு தயாரிப்பது தகவல் தொடர்பாடல்களை எவ்வாறு மேற்கொள்வது போன்ற விடயங்களை பயின்றிருக்கலாம் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை