இரணைமடு விசாரணை குழுவின் இறுதி அறிக்கை ஆளுநாிடம் கையளிப்பு!!

கடந்த டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்கு இரணைமடுக்குளம் காரணமா என்ற உண்மையைக் கண்டறிய கௌரவ ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை குழுவின் தலைவர் பொறியியலாளர் ரகுநாதனால் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம்  இன்று (08) நண்பகல் ஆளுநர் செயலகத்தில் கையளிக்கப்பட்டது.மூவரடங்கிய இந்த விசாரணைக் குழுவின் தலைவராக பொறியியலாளர் ரகுநாதன் செயற்பட்டதுடன் பொறியியலாளர் இந்திரசேனன் மற்றும் பொறியியலாளர் ஹேரத் மந்திரித்திலக ஆகியோர் விசாரணைக்குழுவின் உறுப்பினர்களாக ஆளுநரால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் மற்றும் உதவிச்செயலாளர் ஜே.எக்ஸ்.செல்வநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.