ISIS இலங்கையில் நடத்திய முதலாவது தாக்குதல்!

ஐ.எஸ். உடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் இலங்கையில் முதலாவதாக நடத்திய தாக்குதல், வவுணத்தீவில் கடந்த ஆண்டு நவம்பர் 30ம் திகதி இடம்பெற்றது.

அங்கு இரண்டு காவற்துறையினர் அவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட காவற்துறையிடம் இருந்து எடுத்துக் கொண்ட துப்பாக்கியைக் கொண்டு, அமைச்சர் கபீர் ஹசீமின் இணைப்பு செயலாளர் ஒருவர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.

இந்த விபரங்களை, தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் மொஹமட் சஹ்ரானின் சாரதியான, கஃபூர் என்று அழைக்கப்படும் மொஹமட் ஷரீஃப் ஆதம் லெப்பே (53) வழங்கியுள்ளார்.

அவர் நேற்று காத்தான்குடி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட போது இந்த தகவல் கிடைத்தது.

தற்போது அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.