கோவை கல்லூரி மாணவி கொலை வழக்கில் உறவினர் கைது!!

கோவையில் படித்து வந்த கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது உறவினரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், ராகவநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது 20 வயது மகள் கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கிபி.எஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது இந் நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் அவர் தனது பெற்றோருக்கு போன் செய்து வீட்டுக்கு வருவதாகத் தகவல் தெரிவித்துவிட்டு, கல்லூரியில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். மாணவியின் செல்லிடப்பேசிக்குப் பெற்றோர் தொடர்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால், பதற்றமடைந்த பெற்றோர், அவரை பல இடங்களில் தேடிவிட்டு, கோவை, காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், பொள்ளாச்சியை அடுத்த பூசாரிப்பட்டி அருகே சாலையோரத்தில் பெண் சடலம் கிடப்பதாக கோமங்கலம் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் ஐ.ஜி. பெரியய்யா, டிஐஜி கார்த்திகேயன், எஸ்.பி. சுஜித்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனிடையே, பிரேதப் பரிசோதனையில், மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில், கல்லூரிக்கு வெளியே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கிடைத்த சிசிடிவி பதிவை ஆய்வு செய்தபோது சில ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில், ஒட்டன்சத்திரம், பாச்சலூரைச் சேர்ந்த சதீஷ் (30) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், மாணவியின் உறவினரான சதீஷ், மாணவியைத் திருமணம் செய்து தருமாறு சில ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட போது, மாணவியின் பெற்றோர் மறுத்ததாக தெரியவந்தது. இதையடுத்து, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த சதீஷ், கேரள மாநிலம், கொடுவாயூரில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்துவந்தாராம். இந்நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த சதீஷ், மாணவிக்கு காரில் அழைத்துச் சென்று கொலை செய்ததும் தெரியவந்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.