காஜல் அகர்வாலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

https://www.tamilarul.net/
ஓமங் குமார் இயக்கத்தில் விவேக் ஓபராய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகவுள்ள படம் பிஎம் நரேந்திர மோடி. இந்த திரைப்படம் ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியாக இருந்தது. மோடிக்கு ஆதரவாய் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தேர்தல் நேரத்தில் வெளியாக கூடாது என எதிர்கட்சியினர் டெல்லி உயர்நீதிமன்றதில் மனு அளித்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது, இந்த பிரச்னையின் காரணமாக படத்தை ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியிட முடிவு செய்தது படக்குழு. அதன்படி ஏப்ரல் 11 அன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.


பிஎம் நரேந்திர மோடி படத்தின் நாயகன் விவேக் ஓபராய் இந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து, பிரச்னையின் போது ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். அதில் காஜல் அகர்வால், உங்கள் லுக் மிக அருமையாக உள்ளது, படத்தை பார்க்க காத்திருக்க முடியவில்லை. உங்களுக்கும் படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்திருந்தார்.
சங்கி
காஜல் அகர்வாலின் கமெண்டை ரீட்வீட் செய்து பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர். மோடி படத்துக்கு ஆதரவு தெரிவிப்பதால், சங்கியா நீ என்றெல்லாம் கலாய்த்திருக்கிறார்கள். அதேசமயம் மோடி ஆதரவாளர்கள் சிலர் காஜலை பாராட்டியுள்ளனர்.

Powered by Blogger.