பொது மேடையில் இரு தேசங்கள் என உச்சாித்த ஆளுநா்..!

வடக்குமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய தமிழ் சிங்களப் புதுவருட விழாவானது முல்லைத்தீவு செம்மலை மகாவித்தியாலய மைதானத்தில் 18.04.2019 இன்றைய நாள் இடம்பெற்றது.


இதில் பிரதம விருநதினராக கலந்து கொண்ட வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் கருத்துத் தெரிவிக்கும்போது, இங்கு தமிழ் சிங்கள புத்தாண்டு என்று சொல்வதுபோன்று தெற்கிலே சிங்கள தமிழ் புத்தாண்டு என்பது மட்டும்தான் எங்கள் இரண்டு தேசங்கள் மத்தியில்,

என்று கூறிவிட்டு சமாளிக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் ஊடகங்கள் தன்னை தென்னிலங்கையின் கைப்பாவையாக இருக்கக்கூடும் என்று கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தான் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக கைப்பாவையாக மாத்திரமல்லாது ஆண்டியாகவும் செல்லத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

அதே வேளை தான் நேற்று (17.04.2019) முழு வடமாகாணத்திற்கான 28பில்லியன் ரூபாய் வரவு செலவில் கையொப்பமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் சிங்களப் புத்தாண்டு அல்லது தெற்கிலே சொல்வதுபோன்று சிங்கள தமிழ் புத்தாண்டு என்பது மண்டும்தான் எங்கள் இரண்டு தேசங்கள் மத்தியிலே, நான் பேசும் இந்த வார்த்தையை அரசியல் வர்தையை அரசியல் விஞ்ஞான ரீதியில் பாவிக்கின்றேன்.

எனவே இதில் பத்திரிக்கை நண்பர்களோ, ஊடகத்துறை நண்பர்களோ, எல்லாம் அறிந்த விஞ்ஞானிகள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாதெனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

ஆகவே போர் முப்பதாண்டு, போருக்குப் பின் பத்தாண்டுகள் அதாவது குறைந்தளவு ஒரு தசாப்தம் முடிந்திருக்கின்றது.

ஒரு தலைமுறையே எங்களுடைய தேசத்தினை விட்டு போகவேண்டிய கட்டாயத்தை காலம் எங்களுக்கு விட்டிருக்கின்றது.

ஆகையினாலே மீதம் இருக்கின்ற நாங்கள், வளர்ந்துவரும் இந்த இளம் சமுதாயத்திற்கு தலமை தாங்கவேண்டிய இரட்டிப்பான பொறுப்பை எங்கள் தோள்களில் சுமந்திருக்கின்றோம்

ஆகையினாலே இங்கு கூடியிருக்கின்ற அரசியல், அரச, அரசாங்க என்று மூன்றுபகுதிகளுடைய உத்தியோகத்தர்களை, வேட்பாளர்களை நான் கேட்டுக்கொள்வது என்னவெனில் நீங்கள் ஒரு இடத்திலே உங்கள் பணியைச் செய்துகொண்டிருப்பது நலமாக இருக்கிறது.

நீங்கள் வெவ்வேறு கட்சியைச் சேர்ந்திருப்பதும் ஜனநாயகமாக இருக்கின்றது. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்களைப் பொறுத்தவரையில் இருப்பது ஒருதேசம், இருப்பது ஒரு எதிர்காலம், கட்டவேண்டியது ஒரு சமுதாயம்,

ஆகையினாலே கட்டியமைக்கவேண்டிய அந்த சமுதாயத்திற்காக குறைந்தளவு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது எங்களுடைய வேற்றுமைகளை விட்டு எங்களுடைய மக்களுக்காக பணிபுரியுங்கள் என்று தாழ்மையாக நான் கேட்டுக்கொள்கின்றேன்.

அதுதான் இந்தச் சித்திரை தமிழ், சிங்களப் புத்தாண்டிலே நாங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய, எடுக்கவேண்டிய திறமான தீர்மானம்.

தவறினால் உயர் நடக்காவிட்டால் கால் இந்த நிலையிலே நான் கத்தி முனையில் நடந்துகொண்டிருக்கின்றேன்.

மேலும் தமிழ் ஊடகங்கள் என்னை தென்னிலங்கையின் கைப்பொம்மையாக இருக்கக்கூடும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

நான் அவர்களுக்குச் சொல்வேண்டும், பாரிய அரசியல் யுக்திக்குள்ளே, நான் ஒரு கைப்பாவையாக இருப்பதைப்போல தெரிகின்றது.

நான் தென்னிலங்கைக்குத் தேவையான சில விடயங்களைச் செய்துகொண்டு இருக்கிறேன் என்று குற்றங்கூட வெளியாகத் தெரிகின்றது.

அப்படியெனில் நான் அந்தக் கைப்பாவையாக மாறுவதற்கு ஒரு காரணம் உண்டு. அவர்கள் என்னைக் கைப்பாவை என்று சொன்னார்கள் என்றால் பறுவாயில்லை. நான் கோவிக்கவில்லை.

ஏன் எனில் கைப்பாவை மட்டுமல்ல, கடன் எடுப்பது மட்டுமல்ல, ஆண்டியாகச் சென்றாவது என் மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே ஒரு குறிக்கோள்.

கொள்கை வழியிலே தந்தை தாயை விட்டு, ஆண்டி கோலம் கொண்டு வந்து அமர்ந்த முருகன்கொண்ட தேசமிது.

முருகக்கடவுளை வழிபடுகிற தமிழ் மக்கள் வாழுகின்ற தேசமிது.

ஆகையினாலே இன்னொருவருக்கு நன்மை நடக்குமென்றால், என் தாய் மண்ணுக்கு நன்மை நடக்குமென்றால், என் தமிழ் மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் நான் கைப்பாவை அல்ல அதற்கும் அப்பால்போய் நின்று சேவைசெய்ய விரும்பியிருக்கின்றேன்.

விரும்பி அதைச் செய்துகொண்டிருக்கின்றேன் என்று நான் அதை பதிவுசெய்ய விரும்புகின்றேன்.

நாங்கள் போகவேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கின்றது, செய்யவேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருக்கின்றது. ஆகையினாலே பேச்சுக்களையும், சந்திப்புக்களையும் குறைத்து அதிகமான அளவு வேலைசெய்யவேண்டிய கட்டாயம் எங்கள் மத்தியிலே இருக்கின்றது.

இந்தப் புத்தாண்டிலே வடமாகாணம் ஒரு முன்மாதிரியான மாகாணமாக இருக்கவேண்டும் என்பது என்னுடைய நோக்கம்.

நேற்றைய தினம் முழு வடமாகாணத்திற்கும் சொந்தமான 28பில்லியன் ரூபாய்கள் கொண்ட வரவு செலவை நான் கையொப்பமிட்டேன்.

அதற்கு முன் நான் நடந்த அமர்விலே நான் சொன்து 28பில்லியனுக்கும் மாகாணத்திற்குள்ளேயே எவ்வளவிற்கு உழைத்துக்கொள்ளுகின்றோம் என்பது கேள்விக்குறியாகவும், கவலைக்கரியதாகவும், வெட்கத்திற்கு காரணமாகவும் இருக்கின்றது.

ஆனால் மாகாணத்தின் முழு வருமானத்தையுமே எங்களுக்குள்ளேயே நாங்கள் உழைத்துக்கொள்ளக்கூடும்.

ஏன் எனில் பொருளாதார சுதந்திரமில்லாத ஒரு சமுதாயம் அரசியல் சுதந்திரத்தை யோசிக்க முடியாது, ஊகிக்க முடியாது.

ஆகையினாலே அடிப்படையாக எங்களுடைய மக்கள் பொருளாதார சுதந்திரத்தை அடையக்கூடிய, அடைய வேண்டிய வழிமுறைகளை நாங்கள் தேடவேண்டும். அது எங்களுடைய ஒவ்வொருவருடைய கடமையாக இருக்கின்றது. என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.