அதிமுகவுடன் இணைக்க எந்தப் பேச்சும் நடக்கவில்லை-டிடிவி.தினகரன்!!

அதிமுகவுடன், அமமுகவை இணைக்க எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று டிடிவி.தினகரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுகவும் அமமுகவும் இணைய வாய்ப்பிருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சில வாரங்களுக்கு முன்பு மதுரை ஆதீனம் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அந்தத் தகவல் அடிப்படை ஆதாரமற்றது. அப்படி எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை; அதற்கு அவசியமும் இல்லை என்று மிக நாகரிகமாக மறுப்பு தெரிவித்திருந்தேன்.
இந்தப் பதில்களில் இருந்தே ஆதீனம் உண்மைநிலையைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல் மீண்டும் அதே கருத்துகளை சொல்லியுள்ளார். எங்களுக்கே தெரியாமல் இணைப்புப் பேச்சு நடப்பதாக அவர் தொடர்ந்து பொய் சொல்வதைப் பார்த்தால், யாருக்கோ முகவராக இருக்கிறார் போலத் தெரிகிறது. அது யாருக்கு, எங்கள் துரோகிகளுக்கா? இல்லை எதிரிகளுக்கா? அவர் சொல்வதுபோல இணைப்புப் பேச்சு நடப்பது உண்மையானால், அதைச் செய்வது யார் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டியதுதானே?
யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய்ச் செய்திகளைத் தொடர்ந்து பரப்பினால், மதுரை ஆதீன மடத்தின் பெயரைக் காப்பாற்றவாவது, அருணகிரி ஆதீனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.