ஒற்றுமை இருந்தால்தான் நாட்டில் அமைதி நிலைக்கும்-வைகோ!!

ஒற்றுமை, ஒருமைப்பாடு பன்முகத் தன்மை இருந்தால்தான் நாட்டில் அமைதி நிலைத்திருக்கும் என்றார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

திருச்சி பாலக்கரை அண்ணாசிலை அருகே திங்கள்கிழமை நடைபெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசாரக் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று , காங்கிரஸ் வேட்பாளர் சு.திருநாவுக்கரசரை ஆதரித்து அவர் பேசியது: நாட்டில் ஜனநாயகத்துக்கு பேராபத்து வந்து கொண்டிருக்கிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அகற்றப்படும் என பாஜக தலைவர் அமித்ஷா கூறியதாக வெளிவரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் ஒற்றுமையைப் பேசுவோர், எழுதுவோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. கஜா புயலால் பாதிப்புக்காக பிரதமர் ஒரு வார்த்தைக்கூட இரங்கல் தெரிவிக்கவில்லை. நேரில் வந்தும் பார்க்கவில்லை. காவிரியில் மேக்கேதாட்டுவில் அணைகட்ட கர்நாடக அரசுக்கு, மறைமுகமாக அனுமதி கொடுத்து தஞ்சையை பாலைவனமாக ஆக்க முயற்சிக்கின்றனர். இதற்கெல்லாம் பிரதமரை எதிர்த்து தமிழக அரசு குரல் கொடுக்க அஞ்சுகிறது. தமிழ்நாட்டில் 80 லட்சம் பட்டதாரிகள் வேலையின்றி உள்ளனர். கல்வி கடன்களை, விவசாயக் கடன்களை ரத்து செய்ய மாட்டோம் எனக் கூறும் மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான பல லட்சம் கோடி கடன்களை ரத்து செய்து, வரிச்சலுகைகளை அளித்துள்ளது. தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வஞ்சிக்கப்படுகிறது. ஒற்றுமை, ஒருமைப்பாடு பன்முகத்தன்மை இருந்தால்தான் நாட்டில் அமைதி இருக்கும்.அனைத்து மக்களிடமும் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டுமெனில், அமைதி ஏற்பட வேண்டுமனில் பாஜக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும். அதற்காக திருச்சி தொகுதி மக்கள், காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.