வவுனியா தங்க நகை அடகுச்சேவை நிலையத்தில் திருட்டு!!

வவுனியாவில் நேற்று இரவு மின்தடை அமுலில் உள்ள நேரத்தைப்பயன்படுத்தி தங்க நகை அடகுச்சேவை நிலையத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா பஜார் வீதியிலுள்ள வியாபார மொத்த விற்பனை நிலையம் மற்றும் தங்க நகை அடகுச்சேவை நிலையத்தில் நேற்று இரவு கூரையின் மேல் பகுதியால் உள் நுழைந்த திருடர்கள் தங்க நகை அடகுச் சேவை நிலையத்திற்குள் சென்று அங்கிருந்த தங்க நகைககள் மற்றும் பணங்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் எவரையும் உள் செல்ல அனுமதியளிக்கவில்லை.

நேற்று இரவு மின் தடை அமுலில் உள்ள நேரத்தைப்பயன்படுத்தியும்  மின்தடை நேரத்தில் அங்குள்ள கண்காணிப்புக்கமறாக்கள் செயற்படமாட்டாது என்று தெரிந்து கொண்ட திருடர்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் இத்திருட்டினை மேற்கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் தொடர்ந்து தமது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.