தோனி பதிவிட்ட வைரல் போட்டோ!!

சேப்பாக்கம் மைதானம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டை' என மீண்டும் நீருபித்தார் தோனி.
பலம் வாய்ந்த கொல்கத்தா அணி, இதுவரை விளையாடிய போட்டிகளில் எல்லாம் 180 ப்ளஸ் ஸ்கோர். ராஜஸ்தான் ராயல்ஸ் 139-ல் சரண்டரானது. அந்த ஸ்கோரையும் 14 ஓவர்ல அடிச்சு துவம்சம் பண்ணியிருந்தார்கள் கே.கே.ஆர். அந்த கே.கே.ஆர் டீமையே நேற்று பவர் - ப்ளேயில் பவர் பிடுங்கியது சென்னை அணி. 20 ஓவர் முழுவதும் ஆடிய கே.கே.ஆர் 108 ரன்களுக்கு சரண்டரானது. எந்த ரன்னா இருந்தாலும் நாங்க இப்படித்தானென்று 17-வது ஓவர் வரை கொண்டுபோய் வெற்றிபெற்றது சென்னை அணி. சென்னை அணி, அடுத்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நாளை மோதுகிறது. இந்தப் போட்டி, ஜெய்ப்பூரில் நடக்கிறது.


ராஜஸ்தான் பயணத்திற்குத் தயாரானார்கள், சி.எஸ்.கே டீம். காலையில் விமான நிலையம் வந்த தோனி, ஃப்ளைட் ஏற நேரம் இருந்ததால் வழக்கம்போல தரையில் படுத்துவிட்டார். நேற்று மேட்ச் முடியவே லேட் நைட் ஆனதால், டயர்டில் படுத்துவிட்டார் தோனி. சி.எஸ்.கே விளையாடும் போட்டிகளில் தவறாமல் ஆஜராகிவிடுவார் அவரது மனைவி சாக்‌ஷி. அவரும் தோனி பாணியைப் பின்பற்றி, தரையில் ஒரு குட்டி தூக்கத்தைப் போட, இதை க்ளிக் செய்துவிட்டனர், சென்னை டீம் மேட்ஸ். இந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள தோனி, ஐபிஎல் போட்டிக்குப் பிறகு உங்களுக்கு காலை ஃப்ளைட் இருந்தால் இப்படித்தான் இருக்கும் என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம், தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.