சீன – ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!!

சீனாவிற்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கொனோ, அந்நாட்டு பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்து கலந்துரையாடினார்.


சீன தலைநகர் பீஜிங்கில் இன்று (திங்கட்கிழமை) இச்சந்திப்பு இடம்பெற்றது. இரு தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற பரஸ்பர சந்திப்பில், இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார பிணைப்பு குறித்து கவனஞ்செலுத்தப்பட்டது.

இவ்விஜயத்தின்போது சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயையும் ஜப்பான் அமைச்சர் சந்திந்தார். இதன்போது கிழக்கு சீன கடற்பகுதியில் சர்ச்சைக்குரிய தீவுகளாக காணப்படும் ஜப்பானின் சென்காகு மற்றும் சீனாவின் தியாஒயு ஆகிய தீவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று நாட்கள் விஜயமாக சீனா சென்றுள்ள ஜப்பான் அமைச்சரின் இறுதிநாள் சந்திப்பு இதுவாகும். இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உடன்பாடுகள் தொடர்பாக இடம்பெற்ற ஐந்தாவது உயர்மட்ட சந்திப்பு இதுவாகும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.