பெங்களூரு மைதானத்தை அதிரவிட்ட கோலி !!

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில், முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. 


பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களூரு அணியும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார்.

பெங்களூரு அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஹெட்மெயருக்குப் பதிலாக டிம் சவுத்தியும், உமேஷ் யாதவுக்குப் பதிலாக பவன் நெகியும் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கின்றனர். குறிப்பாக, டிம் சவுத்தி இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்கிறார். கொல்கத்தா அணியில் ஒரே ஒரு மாற்றமாக, நிகில் நாயக்கிற்குப் பதிலாக சுனில் நரேன் களமிறங்கினார்.

பெங்களூரு அணியின் இன்னிங்ஸை கேப்டன் விராட் கோலியும், விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலும் தொடங்கினர். முதல் ஓவரிலேயே இந்த ஜோடி அதிரடி காட்டத் தொடங்கியது. இதனால், பவர் ப்ளேவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் குவித்தது. 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பார்த்திவ் படேல் 8-வது  ஓவரில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, கேப்டன் கோலியுடன் டிவிலியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி, கொல்கத்தா அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன் குவித்தனர்.

இரண்டாவது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்தது இந்த ஜோடி. 31 பந்துகளில் அரை சதமடித்த விராட் கோலி, 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிவிலியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். இறுதி ஓவர்களில் ஸ்டோயினிக்ஸ் அதிரடி காட்ட, பெங்களூரு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. ஸ்டோயினிக்ஸ் 13 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.