ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலை தவிர்ப்பதே எமது முன்னுரிமை-ஹண்ட்!!

மே மாதம் இடம்பெறவுள்ள ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் பங்கெடுப்பதைத் தவிர்ப்பதே அரசாங்கத்தின் முழுமையான முன்னுரிமை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார்.


ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலை தவிர்க்க வேண்டுமெனில் மே மாதம் 23 ஆம் திகதியளவில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் பிரித்தானியா பங்கெடுப்பது நாட்டு மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை உண்டாக்குமெனவும் ஹண்ட் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரெக்ஸிற்றை பிற்போடுவது சர்வதேச அளவில் பிரித்தானியாவின் நிலைப்பாட்டை சேதப்படுத்துவதாக சுட்டிக்காட்டிய ஹண்ட் வெகு விரைவில் பிரெக்ஸிற்றை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.