உலகின் காஸ்ட்லி கார் ரகசியத்தால் குழப்பத்தில் ரசிகர்கள்!!

புகாட்டி நிறுவனத்தின் உலகின் காஸ்ட்லி காரை முன்னணி கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புக் செய்திருப்பதாக, கடந்த வாரம் ஒரு தகவல் பரவியது.


ஜெனீவா மோட்டார் ஷோ 2019 -ல், உலகின் விலை உயர்ந்த கார் என புகாட்டி ( Bugatti) நிறுவனம் அறிமுகப்படுத்தியது.  `லா வாய்ச்சூர் நோய்ரி ( La Voiture Noire) எனப் பெயர்கொண்ட அந்த கார், இந்திய மதிப்பில் சுமார் 86 கோடி ரூபாய். இது, இந்த காரின் விலை மட்டுமே. இந்திய மதிப்பில் உள்ள வரிகளைச் சேர்த்தால், சுமார் 131 கோடி ரூபாய்க்கு மேல் செல்கிறது. ஸ்போர்ட்ஸ் மாடல் காரான இது, மணிக்கு 260 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. அதாவது, மணிக்கு  418 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன்கொண்டது.

கடந்த வாரம் முழுவதும் இந்த காரை பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ வாங்கியதாக இணையத்தில் உறுதிப்படுத்தப்படாத தகவல் பரவியது. இந்த கார் புக் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், புகாட்டி நிறுவனம் தனது காரை வாங்கியவரின் பெயரை ரகசியமாக வைத்துள்ளது. இந்நிலையில்தான் ரொனால்டோ தான் அந்த காரை வாங்கிய நபர் என ஸ்பெய்னின் ஒரு ஸ்போர்ட்ஸ் ஊடகம் செய்தி வெளியிட, தகவல் செம வைரல் ஆனது. ஆனால், இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படாமல் இருந்துவந்தது.

இந்த நிலையில், ரொனால்டோ அந்தக் காரை வாங்கவில்லை என அவரது தனிப்பட்ட தகவல் தொடர்பு அதிகாரி தெரிவித்திருக்கிறார். ரொனால்டோவும் இல்லை என்றால், இந்த காரை யார்தான் புக் செய்திருக்கிறார் என கார் ரசிகர்கள் வலைவீசித் தேடிவருகின்றனர். இதில் இன்னும் சில பெயர்கள் அடிப்படுகின்றன. ஃபோக்ஸ்வோகன் கார் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஃபெர்டினண்ட் பியீச், பிரபல குத்துச்சண்டை வீரர் மேவெதர் உள்ளிட்டோர் ரசிகர்களின் இந்தப் பட்டியலில் உள்ளனர். ரசிகர்கள் பார்வை தற்போது ரொனால்டோவிடம் இருந்து மேவெதர் பக்கம் திரும்பியுள்ளது. குத்துச்சண்டை மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இவரும் ஆடம்பர கார்கள் மற்றும் பொருள்கள்மீது அதிக நாட்டம்கொண்டவர்.

இந்த கார் தற்போது முழுமையாகத் தயாராகவில்லை. ஏற்கெனவே இந்த காரை ஒருவர் புக் செய்திருந்தாலும் அவரின் கைகளில் 2021-ம் ஆண்டுதான் கிடைக்கும். இந்த காரின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

உண்மையில் இந்த காரை புக் செய்தவர்தான் யார்... ஒருவேளை 2021ல்தான் சொல்வார்களோ!
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.