தொடங்கிவிட்டது பிக் பாஸ் சீஸன் 3!!

தமிழ்த் தொலைக்காட்சி உலகில் 2017-ல் அறிமுகமாகி பலத்த வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’. புதிய பரிமாணத்தில் ஆங்கராக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் கமல்ஹாசன்.
இரவு 9 மணியானால் ஊரே டிவி முன் உட்கார்ந்து, முற்றிலும் தொலைத்தொடர்பு வசதி துண்டிக்கப்பட்ட ஒரு வீட்டுக்குள் பிரபலங்கள் பேசும் புறணியைக் கேட்கத் தொடங்கியதில், ஷோ செம ஹிட். ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட, சேனலின் டி.ஆர்-பியும் எங்கேயோபோனது.


அடுத்து சீஸன் 2 ஆரம்பித்தது.

’ஷோ குறித்த அறிமுகம் இல்லாத ஒரு எதிர்பார்ப்பில்தான் முதல் சீஸன் ஹிட் ஆனது; இரண்டாவது சீஸன் அப்படியிருக்காது’ எனப் பேசினார்கள். ஆனால், அந்தப் பேச்சுக்களைப் பொய்த்துப் போக வைத்து இந்த முறையும் அதே வரவேற்பு. இம்முறை கூடுதலான ஒரு விஷயம் என்னவெனில், நடிகர் கமல் அரசியல்வாதியாகியிருந்தார். எனவே, அவரது அரசியல் நக்கல், நையாண்டிகளை வார இறுதி எபிசோடுகளில் பார்க்க முடிந்தது. ஓர் உதாரணம்: பிக் பாஸ் வீட்டுக்குள் அமைக்கப்பட்ட சிறையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, ’வெளியில் உள்ள சிறைச்சாலைகளைப்போல் வசதி வாய்ப்புகளெல்லாம் இல்லை’ என சசிகலாவின் ’பெங்களூரு சிறை வசதி சர்ச்சை’யைச் சீண்டினார்.

இரண்டாவது சீஸனுக்கு ஐஸ்வர்யா தத்தா, ஷாரிக், மஹத், யாஷிகா ஆனந்த் என இளம் பட்டாளங்களால் கூடுதல் கிளாமர் லுக்கும் கணவன் மனைவியான `தாடி’ பாலாஜி - நித்யாவால் பரபரப்பும் அதிகம் கிடைத்தது. இறுதியில் ரித்விகா டைட்டில் வென்றார்.

இதோ பிக் பாஸ் சீஸன் 3-ம் தொடங்கிவிட்டது. மூன்றாவது சீஸனுக்கான புரொமோ ஷூட் இன்று தொடங்கியது. சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அதே பிரமாண்ட பிக் பாஸ் வீட்டையொட்டிய செட்டில், கமல்ஹாசன் கலந்துகொண்ட காட்சிகள் தற்போது ஷூட் செய்யப்பட்டு வருகின்றன.

இம்முறை கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளும் தொடங்கிவிட்டன. அடுத்த சில நாள்களில் புரொமோ வீடியோ சேனலில் ஒளிபரப்பாகலாமெனத் தெரிகிறது. ஜூன் இரண்டாவது வாரத்தில் ஷோ தொடங்க இருக்கிறது.

முதல் சீஸனில் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற கமல் அடுத்த சீஸனில் ‘நீங்க நல்லவரா கெட்டவரா’ என்றார்.

தன்னுடைய அரசியல் முயற்சிக்கான பலன் தேர்தல் முடிவுகள் மூலம் அடுத்த சில தினங்களில் தெரிய இருக்கிற சூழலில் பிக் பாஸ் சீஸன் 3-ல் கமல் என்ன சொல்வார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.