பாலிவுட்டுக்கு போகும் தப்ஸியின் தமிழ்ப்படம்!
ஆடுகளம் படத்தில் ஐரீணாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான தப்ஸி பண்ணு, பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தமிழில் ரீ எண்ட்ரியாக ‘கேம் ஓவர்’ படத்திலும் பாலிவுட்டைப் போலவே பிரதான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அப்படத்தை குறித்த சுவாரஸ்யமான செய்து வந்துள்ளது.
நயன்தாரா நடித்த மாயா, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் இரவாக்காலம் போன்ற படங்களை இயக்கிய அஷ்வின் சரவணன், தப்ஸி பிரதான பாத்திரத்தில் நடிக்கும் ‘கேம் ஓவர்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில், முழுக்க வீல் சேரிலேயே வாழ்வை கழிக்கும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் தப்ஸி நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியிருக்கும் இப்படத்தை பார்த்த பாலிவிட் பிரபல இயக்குநர் அனுராக் கஷ்யப் பெரிதும் ஈர்க்கப்பட்டு படத்தின் இந்தி வெர்ஷனை வெளியிட முன்வந்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ‘கேம் ஓவர்’ விரைவில் வெளிவரவுள்ளது.
அனுராக் கஷ்யப் இயக்கத்தில் தப்ஸி நடித்த மன்மர்ஸியான் என்ற இந்தி திரைப்படம் சென்றாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தப்ஸி ஜெயம் ரவியின் 25ஆவது படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
.
கருத்துகள் இல்லை