அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகா சிங் !!

இயக்குநர் விவேக் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் ‘பாக்ஸர்’ திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தமாகியுள்ளார்.


ஏற்கனவே ரித்திகா இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக நடித்திருந்தார். பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிப்பதற்காக தயாராகிவரும் அருண் விஜய், வியட்நாம் சென்று அங்கு பாக்ஸிங்குக்கான சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் லியோன் ஒப்பந்தமான நிலையில், தற்போது டி.இமான் இசையமைக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் இத்திரைப்படத்திற்கு பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகள் வடிவமைக்கப்படுகின்றது. மார்குஸ் ஒளிப்பதிவையும், மதன் படத்தொகுப்பையும், சி.எஸ்.பாலச்சந்தர் கலை பணியையும் மேற்கொள்கின்றனர்.

எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.