நந்திகடல் சிவந்த வைகாசி மே17..!!

நந்திகடல் சிவந்த வைகாசி மே17
மனிதம் அளித்து மானிடம் மறுப்பு
தமிழர்களின் குருதியில்
நந்திக்கடல் நிறைப்பு
குருதி  நிறைந்த நந்திக்கடலில்
இயந்திரப்படகு ஓடினான்  தமிழன் எதிரி

உலக வல்லரசுகள் இணைந்து
சுற்றி வளைத்தனர் எம் மக்களை
வளைத்த எம்மக்கள் மீது...
ஆயுதபரிசோதனை செய்தனர்
கொத்துக் கொத்தாய் செத்து
மடிந்தான் தமிழன்
விழ்ந்தது எமது உடல்கள் மட்டுமே
 வீரம்  அல்ல .

மொநித்தது எமது கருவிகள்தான்.
மூளை   அல்ல  தமிழன் மூளைக்கு
விலங்கு போடுவது யார்
சிந்திப்போம் உறுதியோடு
குரல்கொடுப்போம் .....

ஒ ..நந்திக்கடல்  தாயே
நீதி இல்லையா. உன்
பிள்ளைகள் அளிக்கப்பட்டோது .நீ
காட்டவில்லை உன் உணர்வை
சுனாமி அலையாக
பவம் நீ என் செய்வாய்

கும்பிட்ட தெய்வம் கூட........
கை கொடுக்க வில்லையே
யாரிடம் போவோம் நாம்
எவரிடம் முறையிடுவோம்
கேள்வி கேட்டால் சதி என்கிறார்கள்
மறுத்து உரைத்தால் விதி என்கிறார்கள்

சொல்லி அழ தம்பிமாரும் இல்லை
அன்பு காட்ட அக்காக்களும் இல்லை
எதிர்த்து நிற்க போர் வீரர்களும் இல்லை 
வெளித்சம் தர சந்திரனும் இல்லை
மிஞ்சியது கொள்கை மட்டுமே
ஒற்றுமையே பலமாக உலகிட்கு
உரைத்திடுவோம்
சென்றிடுவோம் விடியல் நோக்கி
வென்றிடுவோம் அடிமை தனம்..

ஆக்கம்   செந்தமிழன் சுவீஸ்
Powered by Blogger.