கனடா பாராளுமன்றத்தில் தமிழின படுகொலை பற்றிய அறிவியற்கிழமை சட்டமூலமாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!📷

நேற்று, மே 16 கனடிய மண்ணில் ஒன்ராரியோ நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் மே 6 கொண்டு வந்த சட்டப் பிரேரணை விவாதத்திற்கு,  கொண்டுவரப்பட்டு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பின் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்து,  தமிழ் மக்கள் மகிழ்வோடு நன்றி கூறி மகிழ்ந்த கூட்டத்தில் ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது!


 ஒன்ராறியோ மாகாணசபையில்  தமிழினப்படுகொலை பற்றிய அறிவியற் கிழமை ஒன்றை சட்டமூலம் ஆக்குவதற்கான பிரேரணை ஒன்று மே மாதம் 6 ஆம் திகதி ஒன்ராறியோ மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரேரணை மீதான  இரண்டாம் வாசிப்பு மற்றும் வாக்கெடுப்பு இன்று மாகாணசபையில் இடம்பெற்றது.

 முதலில்  உரையாற்றிய Scarborough Rouge Park தொகுதியின் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம்,  அறிவியற் கிழமை ஒன்றை சட்டமூலம் ஆக்குவதற்கான பிரேரணை தொடர்பாகவும்,  ஸ்ரீலங்காவினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தியதோடு தமிழினப்படுகொலை அறிவியற் கிழமை பற்றிய முக்கியத்துவம் பற்றி தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர்கள் தமிழினப்படுகொலை பற்றியும் அவர்களுடைய தொகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள் மூலம் தாங்கள் அறிந்து கொண்ட  விடயங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்த பிரேரணைக்கான வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 59 மாகாணசபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக ஒருவரும் வாக்களிக்கவில்லை.
அனைத்து கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் ஏகமனதாக வாக்களித்ததோடு இந்த பிரேரணை  Standing Committee யினை நோக்கி பரிசீலனைக்காக நகர்ந்துள்ளது.

பரிசீலனையை தொடர்ந்து 3 ஆம்  வாசிப்பு எதிர்வரும் காலங்களில்  நடைப்பெற்று மீண்டும் மாகாணசபையில் வாக்குகளை பெற்று தமிழினப்படுகொலை பற்றிய அறிவியற்கிழமை  சட்டமூலமாக்கப்படும்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.