இலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதா!!

நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றுமுழுதாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. போக்குவரத்துச் சேவைகளும் வழமை போல் இடம்பெறுகின்றன. அலுவலக ரயில்கள் அனைத்தும் உரிய வகையில் சேவையில் ஈடுபடுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவற்றில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகளவில் காணப்படுகிறது. அரசாங்க மற்றும் தனியார் பேருந்துச் சேவைகளும் வழமை போல இயங்குகின்றன. அரசாங்க மற்றும் தனியார் துறை அலுவலகங்களின் நடவடிக்கைகளும் தற்போது முற்றுமுழுதாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அலுவலர்களின் வருகையும் முற்றுமுழுதாக இயல்பு நிலையில் உள்ளதாக நிறுவன தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.