கடும் காற்றுடன் கூடிய மழை!!
நாட்டில் நிலவிய கடுமையான வெப்பத்தினைத் தொடர்ந்து தற்போது பல பாகங்களிலும் மழைபெய்து வருகின்றது. குறிப்பாக, வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய மழையினால் 7 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக வவுனியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீரென கடும் காற்றுடன் மழை பெய்தது.
இதனையடுத்து சுழல் காற்று வீசியதில் வீடுகளின் மேல் போடப்பட்டிருந்த கூரைகள் தூக்கி வீசப்பட்டன. இதனால் ஆறுமுகத்தான் புதுக்குளம், மரையடித்தகுளம், ஓமந்தை ஆகிய பகுதிகளில் 7 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் மரையடித்தகுளத்தில் மின் கம்பங்களுக்கு மேல் மரம் முறிந்து வீழ்ந்ததால் மின் கம்பங்கள் உடைந்து மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
இதேவேளை ஆறுமுகத்தான் புதுக்குளத்தில் வீடு உடைந்து வீழ்ந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் ஆலயமும் சேதமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை