பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!! தடுமாறும் அரசு!!

பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முதல் முதலாக கடந்த பெப்ரவரி மாதம் தென் பாகிஸ்தானில், ஒரு குழந்தை தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.


அதனை தொடர்ந்து ஏராளமான குழந்தைகள் தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

இதனால் குழப்பமடைந்த மருத்துவர் இம்ரான் ஆர்பானி என்பவர் குழந்தைகளின் ரத்தத்தை பரிசோதித்து பார்த்ததில் அனைவருக்கும் எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்தது.

கடந்த ஏப்ரல் 24ம் திகதி வரை ஒரு சிறு பகுதியில் மாத்திரம் 15 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சிந்து மாகாணத்தில் தீவிர காய்ச்சலில் பாதிக்கப்பட்ட பலரிடம் மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் 607 பேருக்கு எச்.ஐ.வி இருப்பது தெரியவந்துள்ளது.

அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். குழந்தைகளின் பெற்றோருக்கு எச்.ஐ.வி இல்லாத போது, குழந்தைகளுக்கு மாத்திரம் எவ்வாறு பரவியது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.