தரச் சான்றிதழ் இல்லாத ஆபரணங்களை விற்பனை செய்வது குறித்து விரைவில் கடுமையான சட்டம்!!

ஆபரணங்களுக்கு தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் தரச் சான்றிதழ் முத்திரையை கட்டாயமாக்குவதற்கும் அந்த முத்திரையின்றி ஆபரணங்களை விற்பனை செய்யும் ஆபரண விற்பனை நிலையங்களை சுற்றி வளைத்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.


ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (22) முற்பகல் தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின்போதே இது பற்றி கவனம் செலுத்தப்பட்டது.

இத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இன்று முற்பகல் கொள்ளுபிட்டியிலுள்ள தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், அதன் பணிகளை பார்வையிட்டதுடன், பணிக்குழாமினருடன் முன்னேற்ற மீளாய்வு கூட்டமொன்றிலும் கலந்துகொண்டார்.

தரச் சான்றிதழ் இல்லாத ஆபரண விற்பனை சந்தையில் பரவலாக இடம்பெறுவதன் காரணமாக ஆபரணங்களை விற்பனை செய்கின்றபோது தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் தரச் சான்றிதழ் முத்திரையை பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தரச் சான்றிதழை பெற்றுக்கொள்வது குறித்து அனைத்து ஆபரண விற்பனையாளர்களையும் அறிவூட்டுவதற்கும் ஆபரணங்களை கொள்வனவு செய்கின்றபோது கவனமாக இருப்பது குறித்து பொதுமக்களை தெளிவூட்ட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். விரைவில் குறித்த சட்ட திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இரத்தினக்கல் அகழ்வு காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்கும்போது ஏற்படும் பிரச்சினைகள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் தொடர்பாக தடை நீக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் தலைவர் ரெஜினோல்ட் குரே, பணிப்பாளர் நாயகம் எச்.பி.சுமணசேகர உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #ColomboPowered by Blogger.