"மோடிக்கு வெற்றி; இந்தியாவுக்கு தோல்வி'!!

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு வெற்றி கிடைத்திருக்கலாம், ஆனால் அது இந்தியாவுக்குத் தோல்விதான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறோம். இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே தேர்தல். மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற சித்தாந்தமும், மக்களைப் பிரித்து வைத்துதான் வாழ வேண்டும் என்ற சித்தாந்தமும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டது.
விந்திய மலைக்குத் தென்புறம் இருக்கும் மக்கள் நாங்கள் ஒற்றுமையாக இருந்து, இந்தத் தேசத்தைப் பாதுகாப்போம் என்று வாக்களித்துள்ளனர்.


இந்த உணர்வு விந்திய மலைக்கு மேற்கே, வடக்கே இல்லை. அதுதான் வித்தியாசம். ஆனால், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். இந்தத் தேர்தல் குறித்து ஒரே ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் மோடி வெற்றி பெற்றிருக்கிறார். இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.