தமிழகத்தை ஆளும் தகுதி அதிமுகவுக்கே உண்டு: முதல்வர் -துணை முதல்வர் கூட்டறிக்கை!

தமிழகத்தை ஆளும் தகுதி அதிமுகவுக்கே உண்டு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுவதாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இருவரும் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கின்றன. தேச பக்தியும் மக்கள் தொண்டும் தனது இருகண்களாகக் கொண்டு நல்லாட்சியை நடத்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் உழைப்புக்குக் கிடைத்த சிறப்பான வெற்றி இது. உலகமே வியந்து பாராட்டும் வகையில் தேசத்தின் குடிமக்கள் தேர்தலில் பங்கேற்று ஜனநாயகத்தை வலுபடுத்தியிருக்கிறார்கள்.


திசைமாறியோர்: தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டை ஆளும் தகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உண்டு என்பதை காட்டுகிறது. இடைத் தேர்தல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளில் கழகத்தின் வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர். வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்லாட்சியைத் தொடர்ந்து வழங்குவோம். அதிமுகவினர் அனைவரும் ஓரணியில் திரண்டு ஒற்றுமையுடன் உழைக்க வேண்டிய நேரம் இது. தவறான வழிகாட்டுதல்களாலும், தனி மனிதர்கள் சிலர் உருவாக்கிய தோற்றப் பிழைகளாலும் திசை மாறிய கட்சியினர் அனைவரும் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும். மக்களவைத் தேர்தலில் கழகத்தின் சார்பிலும் கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காகவும், சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட்ட கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் கடினமாக உழைத்த நிர்வாகிகளுக்கும், கட்சியினருக்கும், தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.