தாக்குல் சம்பவம் தொடர்பான விசாரணை – உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அழைப்பு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் 29 ஆம் திகதி இந்த சம்பவங்கள் தொடர்பான உயர்மட்ட அதிகாரிகளை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.


எமது ஆதவன் செய்தி சேவைக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைவாக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் N.K. இளங்கோன், இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க, பாதுகாப்புத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரட்ன அகியோரையே எதிர்வரும் 29 ஆம் திகதி புதன்கிழமை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இதில் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட புஜித் ஜயசுந்தர ஆகியோர் ஏற்கனவே தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அலட்சியம் தொடர்பாக குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை தாக்குதல்களுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக அறிவதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

இந்த தாக்குதல் இடம்பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்த விடயம் தொடர்பான எச்சரிக்கையை பெர்னாண்டோ மற்றும் ஜயசுந்தரவிடம் முன்வைத்ததாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் இந்த விசாரணைகளை அடுத்து நாடாளுமன்ற தெரிவுக் குழு ஜூன் 4 ஆம் திகதியன்று மீண்டும் கூடும் என எம்மால் அறியமுடிகின்றது.

ஆளும் கட்சியில் இருந்து 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியில் இருந்து 13 உறுப்பினர்களும் 5 தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் 2 மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு இந்த விடயம் தொடர்பான விசாரணைகளின் அறிக்கையினை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.