இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு பயணம்!
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு செல்லவுள்ளது.
அதன்படி நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி இங்கிலாந்து செல்லவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி மே 30 ம் திகதி நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை