சரத்குமார்,ராதா ரவி கைதா? உயர்நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு!

தென் இந்திய நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக விற்ற குற்றத்துக்காக ராதா ரவி மற்றூம் சரத்குமார் ஆகியோரை கைது செய்து விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே வேங்கடமங்கலம் கிராமத்தில் நடிகர் சங்கத்திற்குச் சொந்தமாக 26 சென்ட் நிலம் இருந்தது. அந்த நிலத்தை செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் அனுமதியின்றி அப்போதைய நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி உள்ளிட்டவர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து விற்றதாக நடிகர் சங்கத்தின் தற்போதைய செயலாளர் விஷால் குற்றம் சாட்டியிருந்தார். 


இந்த வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் விசாரணைக்கு வந்த போது விஷாலின் மனுவில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யும் படி காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து  காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நில விற்பனை தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பித்தார் தற்போதைய நடிகர் சங்கத் தலைவர் நாசர்.

நாசர் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில் இதை விசாரித்த நீதிபதி, 'நடிகர் சங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தேவைப்பட்டால் கைது செய்து விசாரணை செய்யும்படி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் அவர்களிடம் விசாரணை செய்த அறிக்கையை மூன்று மாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
இந்த உத்தரவின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட சரத்குமார், ராதாரவி கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.