ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளியது இங்கிலாந்து !

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி., சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 

indian team
இதில் இங்கிலாந்து ஒருநாள் போட்டிக்கான தரவரிசையிலும் இந்தியா டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையிலும் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இயான் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆடிய 62 ஒருநாள் போட்டிகளில் 43 போட்டியை வென்று, 14 போட்டிகளில் மட்டுமே தோல்வியை பெற்றுள்ளது. இதனால் 123 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளது இங்கிலாந்து. இரண்டாவது இடத்தில் இந்திய அணி 121 புள்ளிகளுடன் நீடிக்கிறது. இந்திய அணி இந்த சீசனில் இதுவரை ஆடிய 70 போட்டிகளில் 49 போட்டிகளை வென்று 18 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
england team
தரவரிசை பட்டியல்
1 இங்கிலாந்து
2 இந்தியா 
3 தென் ஆப்ரிக்கா
4 நியூசிலாந்து
5 ஆஸ்திரேலியா
6 பாகிஸ்தான் 
7 பங்களாதேஷ்
8 மேற்கிந்திய தீவுகள் 
9 இலங்கை
10 ஆப்கானிஸ்தான்

No comments

Powered by Blogger.