சென்னை அணியில் இருந்து விலகும் முக்கிய வீரர் ; கவலையில் ரசிகர்கள் !

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.
மொஹாலியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, டூ பிளெசிஸ் 96 ரன்களும், சுரேஷ் ரெய்னா 53 ரன்களும் எடுத்தனர்.
kl rahul
அடுத்ததாக களமிரங்கிய பஞ்சாப் அணியின் கே.எல். ராஹுலின் சிறப்பான ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது பஞ்சாப் அணி. இதனால் சென்னை அணிக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. காரணம் சென்னை அணி ஏற்கனவே ப்லே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
kedhar
இதில் விளையாடிய கேதர் ஜாதவுக்கு போட்டியின் போது காயம் ஏற்ப்பட்டதால், இனி வரும் போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம் தான் என தெரிவித்துள்ளனர்.
போட்டியின் முடிவில் பெசிய பயிற்சியாளர் பிளேயிங் கூறுகையில் கேதர் ஜாதவை எங்களது மருத்துவ குழு கண்கானித்து வருகிறது, அவருக்கு நாளை ஸ்கேன் எடுத்து பார்க்கப்படும், அதன்பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றார். 
jadhav
ஒருவேளை அவர் விரைவில் குணம் அடந்தாலும் உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு கேதர் ஜாதவிற்கு ஐ.பி.எல் நிர்வாகம் ஓய்வு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Powered by Blogger.