டாக்டர் பணியை ஏன் தொடரவில்லை? நடிகை சாய் பல்லவி சொல்லும் காரணம்!

நடிகை சாய் பல்லவி தான் ஏன் டாக்டர் பணியை தொடரவில்லை என்பது பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

நடிகை சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள NGK திரைப்படம் வரும் மே 31ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் காரணமாக அப்படத்தின் படக்குழு தீவிர புரமோஷன் பணியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகச் சாய் பல்லவி சமீபத்தில் ஒரு ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அதில்,அவர் படித்த டாக்டர் படிப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. 
sai pallavi
அதற்கு அவர் கூறியதாவது, 'நான் மருத்துவமனைக்குச் சென்று ப்ராக்டிஸ் செய்வதில்லை. ஆனால் கண்டிப்பாக படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். என்னுடைய திறமை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு போய்க் கொண்டிருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். நாம் நன்றாகச் செய்த ஒரு விஷயம் இப்போது நமக்குச் சுத்தமாக வராத போது இதயம் நொறுங்குவதைப் போல இருக்கிறது. 
sai
இப்போது நான் ஒரு மருத்துவமனைக்குச் சென்றாலும் கண்டிப்பாக யாரும் என்னை நம்பப் போவதில்லை. ஆனால் கண்டிப்பாகக் கூட்டம் வரும். வந்து புகைப்படம் எடுத்துக் கொள்வார்களே தவிர, நான் தரும் மருந்துச் சீட்டைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனா என் வீட்டைப் பொறுத்தவரைக்கும் அவங்க எல்லாருக்கும் நான் தான் டாக்டர் ' என்று கூறியுள்ளார்.

Powered by Blogger.