நுங்குத் திருவிழா

எந்தப் பண்பாடும் உலகத்திற்கு வழங்கியது பொதுச்சொத்தே. அதன் உரிமம் தொடர்பான பன்னாட்டு நிறுவனங்களின் பிடிகளிலிருந்து மீட்பதும், அல்லது அதனை நெருங்க விடாது காப்பதுமே மரபுரிமைச் செயல்பாடு. அது ஓர் இனவுணர்வோ, பண்பாட்டுப் பெருமிதமோ அல்ல. பெருமிதம் தேவையற்ற ஒன்று. அது உடனடியான உணர்வுப் பெருக்கை, ஒரு கூட்டுணர்வை அளிப்பதாய்த் தோன்றினாலும் அது உண்மையானதல்ல. நாம் இந்த இயற்கை மரபுரிமையப் பேணியாக வேண்டும். அவ்வளவு தான். அது பூமியுடனான, அதன் வளங்களுடனான நமது அணுகுமுறை. செயல்படுவதென்பது வாழும் அனைத்திற்குமானது.


நாம் இயற்கையைப் பேணவே அதனைக் கொண்டாடுகிறோம். இயற்கையை யாரும் உரிமை கொள்ள முடியாதென்பதும் அதனுடன் நாம் கொள்ளும் வளப்பகிர்வு ஒப்பந்தமும் தான் முக்கியமானது. அது ஓர் ஆழ்ந்த விழிப்புணர்வுள்ள அரசியல் கொண்டாட்டம். நாம் விதைப்பது  மரங்கள் என்பதோ குளிப்பது நுங்கு என்பதல்ல இங்கு முக்கியம், கனிவது என்ன என்பது தான் முக்கியம். அதுவே பண்பாடு. அது இயல்பானது.  தானே தன்னை இயற்கையென்று உணர்ந்த அறிதலே மனிதர்கள் தாங்களே உருவாக்கிக்கொண்ட எல்லைகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும்.

விழிப்புள்ள கொண்டாட்டமே அரசியல்.
Powered by Blogger.