சபாநாயகர் நோட்டீஸுக்குத் தடை கேட்கும் பிரபு!!

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்குத் தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மூன்றாவது எம்.எல்.ஏ. பிரபு இன்று (மே 8) மனுதாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரபு தாக்கல் செய்துள்ள மனுவில், “என் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்திருக்கிறது. மேலும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உள்நோக்கத்துடன் எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே என் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இம்மனு விசாரணைக்கு வரும்போது மற்ற இரண்டு எம்.எல்.ஏ.க்கள் அளித்துள்ள மனுவுடன் இணைக்கப்பட்டுவிடும். அதனால் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வழங்கியுள்ள இடைக்காலத் தடை உத்தரவானது, மூன்றாவது எம்.எல்.ஏ.வான பிரபுவுக்கும் பொருந்தக்கூடியது ஆகிவிடும்.


தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்டு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு எதிராக ரத்தினசபாபதி, கலைச்செல்வன் இருவரும் தொடர்ந்த வழக்கில், நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடராத மூன்றாவது எம்.எல்.ஏ.வான கள்ளக்குறிச்சி பிரபு, சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க அவகாசம் கேட்டு மனு அளித்தார். ஆனால், “உச்ச நீதிமன்றம் விதித்த தடை மூன்றாவது எம்.எல்.ஏ.வான பிரபுவுக்கும் பொருந்தும். எனவே பிரபு சபாநாயகரிடம் விளக்கம் அளிக்கத் தேவையில்லை” என்று சட்டப்பேரவைச் செயலகம் விளக்கம் அளித்திருந்தது.


பிரபுவின் நிலைப்பாடு தொடர்பாக நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் , “பிரபு சில நாட்கள் சைலண்ட்டா இருந்ததும் நம்ம பக்கம் வந்துவிடுவார் என்று எடப்பாடியே நம்பிவிட்டார். அதேபோல இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றம் போன பிறகும் பிரபு போகவில்லை.

இது சி.வி. சண்முகத்தின் வெற்றி என கருதப்பட்டது. ஆனால் அதன் பின்னால் இருந்ததும் தினகரன்தான் என்பது தாமதமாகத்தான் தெரிந்திருக்கிறது எடப்பாடிக்கு. அதாவது தினகரன் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படிதான் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களோடு தொடர்பில் இருந்திருக்கிறார் பிரபு” என்று குறிப்பிட்டிருந்தோம். இந்த நிலையில் இரண்டு எம்.எல்.ஏ.க்களுக்கும் உச்ச நீதிமன்றத்தில் சாதகமான உத்தரவு வந்துள்ளதன் காரணமாக, பிரபுவும் மனுதாக்கல் செய்திருக்கிறார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.