கொலைப் பின்னணியில் ‘ஒத்த செருப்பு’!
பார்த்திபன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் பணிகள் நிறைவடைந்து புரொமோஷனில் ஈடுபட்டுவருகிறது படக்குழு.
முக்கிய கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்துவரும் பார்த்திபன்,
‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்திற்கு பின் ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்குவதோடு அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கொலைப் பின்னணியில் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பணிகள் நிறைவடைந்து படக்குழு இசை வெளியீட்டு விழாவிற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. பார்த்திபன் தனது பயாஸ்கோப் பிலிம் பிரேம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அந்தவகையில் பார்த்திபன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனைச் சந்தித்து இசை வெளியீட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அந்த சந்திப்பின் போது சில புத்தகங்களை கமல்ஹாசனுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அதோடு இயக்குநர் ஷங்கரையும் சந்தித்து பார்த்திபன் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்.
ஷங்கர் - கமல் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் தயாராகிவரும் நிலையில் கமல், ஷங்கர் இருவரும் நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்த்திபன் நடிப்பில் தற்போது அயோக்யா திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை