ஐஎஸ்சி தேர்வில் சாதனை!

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) நடத்தும் பன்னிரண்டாம் வகுப்பு (ஐஎஸ்சி) பொதுத்தேர்வில் இரண்டு பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) நடத்தும் பத்தாம் வகுப்பு (ஐசிஎஸ்இ) பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரையும், பன்னிரண்டாம் வகுப்பு (ஐஎஸ்சி) பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 4ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரையும் நடைபெற்றன. பத்தாம் வகுப்புத் தேர்வை 1 லட்சத்து 96 ஆயிரத்து 271 மாணவ மாணவியரும், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வை 86,713 மாணவ மாணவியரும் எழுதினர்.

இந்த தேர்வு முடிவுகள்  (மே 7) வெளியானது. பன்னிரண்டாம் வகுப்பில் 96.52 சதவிகிதம் பேரும், பத்தாம் வகுப்பில் 98.54 சதவிகிதம் பேரும் தேர்ச்சியடைந்தனர்.

ஐஎஸ்சி எனும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் பெங்களூருவைச் சேர்ந்த விபா சுவாமிநாதன் என்ற மாணவியும், கொல்கத்தாவைச் சேர்ந்த தேவாங் குமார் அகர்வால் எனும் மாணவரும் 100 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுச் சாதனை படைத்தனர். இருவரும் 400க்கு 400 மதிப்பெண் பெற்றனர்.
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் செயலாளர் ஜெர்ரி அராத்தூன் பேசியபோது, இது கவுன்சிலில் படைக்கப்பட்ட சாதனை என்று தெரிவித்தார். “கடின உழைப்பினால் இந்த முடிவைப் பெற்றுள்ளனர் மாணவர்கள். அவர்களுக்குத்தான் இந்த பெருமை போய்ச் சேரும்” என்று கூறினார்.
இந்த தேர்வில் 399 மதிப்பெண்களை 16 பேரும், 398 மதிப்பெண்களை 36 பேரும் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 83 ஐசிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த 3,831 மாணவ மாணவியர் பத்தாம் வகுப்புத் தேர்வில் பங்கேற்றனர். இதில் 99.79 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 49 ஐஎஸ்சி பள்ளிகளைச் சேர்ந்த 1,646 பேர் தேர்வெழுதினர். இதில் 99.57 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.