அர்ஜுன் ரெட்டி ரீமேக் புதிய அப்டேட்!

கபிர் சிங் என்ற பெயரில் இந்தியில் உருவாகிவரும் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் படத்தின் வெளியீட்டு தேதியும் டிரெய்லர் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படம் கபிர் சிங் என்ற பெயரில் இந்தியில் ரீமேக்காகிறது. ரிலீசுக்கு தயாராகி வரும் இப்படத்தின் டீஸர் இணையத்தில் சென்ற மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டியை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்காவே ஷாஹித் கபூர், கியாரா அத்வானி உள்ளிட்டோரை வைத்து ரீமேக் செய்துள்ளார். கபிர் சிங் படம் வரும் ஜூன் மாதம் 21ம் தேதி ரிலீஸாக உள்ளது. தற்போது இதன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மே 13ஆம் தேதி இணையத்தில் வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பையும் பகிர்ந்துள்ளது.
துருவ் விக்ரம் நடிக்க தமிழில் ஆதித்யா வர்மா எனத் தயாராகும் அர்ஜுன் ரெட்டி ரீமேக்கின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.