பிரித்தானியப் பாராளுமன்றத்தில் தமிழினவழிப்பினை நினைவுகூரும் முகமாக ஒன்று கூடிய தமிழர்கள்!!

மே மாதம் 2009இல் எமது இனம் இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்தும் எமக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை. தொடர்ந்தும் இலங்கைத்தீவில் தமிழர்கள் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றனர். 10ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நாளினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்களால் (Tamils for Labour) ஒன்றுகூடலொன்று இன்று (15/05/2019) ஏற்பாடு செய்யப்பட்டது. மாலை 6 மணியளவில் ஆரம்பமான ஒன்றுகூடலானது இரவு 9 மணிவரை நடைபெற்றது.

பிரித்தானியப் பாராளுமன்றத்தின் கட்டத்தொகுதில் நடைபெற்ற ஒன்று கூடலில் பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவரும், தொழிற்கட்சித் தலைவருமான ஜெரமி கோர்பின் (Jeremy Corbyn) அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அத்துடன் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான நிழல் நிதித்துறை அமைச்சர் ஜோன் மக்டோனல் (John McDonnell, Shadow Chancellor of the Exchequer), நிழல் வெளியுறவுத்துறை அமைச்சர் எமிலி தோன்பெரி (Emily Thornberry, Shadow Foreign Secretary), நிழல் பன்னாட்டு வணிகத்துறை அமைச்சர் பரி கார்டினர் (Barry Gardiner, Shadow Secretary of State for International Trade), வீரேந்திர சர்மா (Virendra Sharma), கரெத் தொமஸ் (Gareth Thomas), சிவோன் மக்டோனா (Siobhain McDonagh), வெஸ் ஸ்ட்ரீட்ங் (Wes Streeting) கலந்து கொண்டனர்.மேலும் சோன்யா சோன்யா ஸ்கீட்ஸ் (Sonya Sceats, Freedom from Torture, CEO), சட்ட வல்லுனர்கள், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் மக்கள் கலந்து கொண்டு உரைகள் ஆற்றினர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.