அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் மற்றும் அனைத்து ஊடகங்களின் முக்கிய கவனத்திற்கு!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப கட்டமைப்புக்களும், மே 18 பேரணி ஏற்பாட்டுக்குழுவும் விடுக்கும் அவசர செய்தி !


                                                                                                                             14.05.2019.
தமிழின அழிப்பின் அதியுச்ச நாளாம் மே 18 இன் 10 ஆவது ஆண்டு நினைவு சுமந்த நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர்கள் இதயமாகக் கருதப்படும் லாச்சப்பல் பகுதியில் A l’intersection Rue Philippe de Girard- Rue Cail et Rue Louis Blanc என்னும் வீதிகள் சந்திக்கும் இடத்தில் சனிக்கிழமை பி . பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

முள்ளிவாய்க்கால் 10 ஆவது ஆண்டினை பேரணியாக சென்று முடிவில் றீப்பப்ளிக் திடலில் (Place de la République) நடாத்துவதற்கு அனுமதி கோரியிருந்தும் அன்றைய நாளில் Place de la République என்னும் இதே இடத்தில் பாரிசு பல்கலைக்கழக மாணவர்களினது பேரணியும், கடந்த பல மாதங்களாக மஞ்சள் அங்கி போராட்டக்காரர்கள் நடாத்தி வரும் தொடர் போராட்டம் காரணமாகவும், எமது மக்களின் பாதுகாப்பையும், கரிசனையையும் கருத்திற் கொண்ட காவல்துறையினர் பேரணி அனுமதியை ரத்துச்செய்து ஒன்று கூடலினை லாச்சப்பல் பகுதியில் நடாத்துமாறு அனுமதி வழங்கியுள்ளனர் என்பதை அனைத்துத் தமிழ்மக்களுக்கும் அவசர செய்தியாகத் தெரிவிப்பதுடன்

18.05.2019 சனிக்கிழமை பி. பகல் 2.00 மணிக்கு வணக்க நிகழ்வும், தொடர்ந்து 10 ஆவது ஆண்டின் நினைவு சுமந்த நிகழ்வுகளும் மேற்குறிப்பிட்ட (La Chapelle) முகவரியில் நடைபெறவுள்ளன என்பதை இத்தால் அறியத்தருகின்றோம்.

                                                    நன்றி.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

அதன் அனைத்து உப கட்டமைப்புகளும் – மே 18 ஏற்பாட்டுக்குழுவும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.