ஐரோப்பிய ஒன்றியம் ஊடகங்கள் மீது அறிக்கை!


சமூக வன்முறைகள் இடம்பெறும்போது குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், தூண்டியவர்கள் மீது சட்டம் சமமான முறையில் பிரயோகிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. தெளிவான தலைமைத்துவம், வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை நிராகரிக்கும் செயற்பாடுகள் மிக முக்கியமானவை. நாட்டின் குடிமக்கள் அனைவரின் பாதுகாப்பை உறுதிசெய்வற்கான சகல செயற்பாட்டையும் முன்னெடுத்து, அவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் சகல செயற்பாட்டையும் முன்னெடுக்க அரசாங்கத்தை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளது. தவறான தகவல்களை பரப்பி நாட்டில் வன்முறையை தூண்டாமலிருப்பது குடிமக்கள், ஊடகங்களின் பொறுப்பு என்றும் வலியுறுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.