பிரான்சில் வெர்சைல் தமிழ்ச்சங்கத்தின் விளையாட்டு விழா!!

பிராங்கோ வெர்சைல் தமிழ்ச்சங்கம் வெர்சைல் மாநகரசபை இணைந்து நடத்திய விளையாட்டு விழா கடந்த 05/05/2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ஆரம்பநிகழ்வாக தமிழீழத் தேசியக்கொடியை வெர்சைல் தமிழ்ச்சங்கத் தலைவர் ஏற்றிவைக்க Maison de quartier மாநகரசபை விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் me Martin franche பிரெஞ்சுக் கொடியை ஏற்றிவைத்தார்.

பாரம்பரிய பறைஇசை அணிவகுப்போடு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர்.

பொதுச்சுடரினை வெர்சைல் தமிழ்ச்சோலைப்பள்ளி நிர்வாகி ஜகுலேந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுக்கள் சிறப்பாக இடம்பெற்றன. வெற்றி பெற்ற வர்களுக்கான பரிசளிப்பும் சிறப்பாக இடம்பெற்றது.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடல் ஒலித்ததைத் தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.No comments

Powered by Blogger.