கைது விவகாரம் தொர்பில் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடி தீர்மணம்!

இதில் மாணவர்களுக்கான விடுதலை சாத்தியமாகும் என்பதனை தாம் முழுமையாக நம்புவதாகவும், பேதங்களை கடந்து பலரும் குரல் கொடுப்பது ஆதரவளிக்கின்றது எனவும் இதனால் தாம் இதனை அமைதியாக கையாள விரும்புவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
மாறாக இவர்களின் விடுதலை சாத்தியமாகாத பட்சத்தில் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளை புறக்கணிக்க வேண்டும் எனவும் இவ்விடயத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பாகவும் முடிவுகள் எடுக்கப்பட்டது.அதனை தொடர்ந்து நீதிமன்றில் வழக்கை மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள், மாணவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்
கருத்துகள் இல்லை